25 January 2014

வினா-விடை -3 (25-01-2014)


ஒரே நாளில் இரு சகோதரர்கள்  பிறந்தனர். வாழ்ந்தனர். ஒரே வருடம்  இருவரும் இறந்தனர். ஆனால் ஒருவருக்கு வயது 50. இன்னொருவருக்கு வயது 150. இது எப்படி? அந்த இரண்டு சகோதரர்கள் யார்?

இந்த பூமியிலுள்ள ஒரு இடம். அதன்மீது ஒரே ஒருமுறை சூரிய ஒளி பட்டது. அதற்குப் பிறகு எப்போதும் அதில் சூரிய ஒளி படவே இல்லை. அது எந்த இடம்?
குரானிய வரலாற்றின் வெளிச்சத்திலேயே  இதற்கு விடை காணலாம்.

விடைகள்:

1.உஜைர் (அலை) அவர்களும் அவர்களின் சகோதரரும் ஒரே நாளில் பிறந்தனர். இடையில் உஜைர் (அலை) அவர்கள் ஒரு காட்டுக்குள் சென்று மரத்தடியில் ஓய்வெடுத்த போது 100 வருடங்கள் அல்லாஹ் அவர்களைத் தூங்க வைத்தான். வித்தியாசமான தூக்கம். அவரது உடல் இயக்கத்தை நிறுத்திவிட்டான். அந்த நூறு வருடங்கள் உலகம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இவரது உடல் இயக்கம் மட்டும் அப்படியே நிறுத்தப்பட்டு பிறகு அவர் எழுப்பப்பட்டபோது எத்தனை வயதில் தூங்கினாரோ அத்தனை வயதில் எழுந்தார். ஆனால் அவரது சகோதரருக்கோ அந்த 100 வருடங்களும் வயது ஓடிக்கொண்டுதான் இருந்தது பிறகு இருவரும் வாழ்ந்து மரித்தபோது ஒருவருக்கு வயது 50, மற்றொருவருக்கு வயது 150.

2. மூஸா அலை  அவர்கள் கைத்தடியால் அடிக்க செங்கடல் பிளந்தபோது அந்த தரையில் ஒரு முறை சூரிய ஒளி பட்டது. அதற்குப் பிறகு அது மூடியவுடன் இனி எப்போதும் அந்த தரையில் சூரிய ஒளி படாது.

விடை எழுதிய அதிர்ஷ்டசாலிகள் :

நலீஃபா ஷமீம்
நூர் ஃபசிலா



No comments:

Post a Comment