23 September 2019

Jadual mengaji Baharu



Kelas mengaji:
Isnin - Rabu 5:30-9:00 pm
Khamis 5:30-7:00 pm


Kelas Tafsir Al-Quran 
Jumaat Kedua Dan Keempat Setiap Bulan 8:30-9:30 pm
------
Kelas Tahfiz Al-Quran
Isnin - Jumaat 10.00 am - 12.00 pm
☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️
குர்ஆன் வகுப்புகள்:
திங்கள் முதல் புதன் வரை மாலை 5.30 லிருந்து 7 மணி வரை ஒரு பிரிவாகவும், 7.30 லிருந்து 9 மணி வரை ஒரு பிரிவாகவும் வகுப்புகள் நடைபெறும்
வியாழக்கிழமை மாலை 5.30 லிருந்து 7 மணி வரை மட்டும் வகுப்பு நடைபெறும். 

தஃப்ஸீர் அல்குர்ஆன் விரிவுரை வகுப்பு 
வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணிவரை நடைபெறும்.

குர்ஆன் மனன வகுப்புகள்:
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை.
☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️

19 September 2019

Majlis Asmaul Husnah

⭐⭐⭐⭐⭐⭐⭐
Majlis Asmaul Husnah
அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்
⭐⭐⭐⭐⭐⭐⭐
🗓 19.09.2019 Malam jumaat வெள்ளி இரவு

⏰ 08.15- 09:30 mlm
இரவு 08:15- 09:30 மணி வரை.

🕌 Madrasah Imam Ghazzali, BBS Fasa 2B
மதரஸா இமாம் கஸ்ஸாலி, செலாயாங்.
-----------------------------
📚 Bacaan Asmaul Husnah
அஸ்மாவுல் ஹுஸ்னா  ஓதுதல்

🎙 Tazkirah
சிற்றுரை

📖 Surah Yasin
சூரா யாசீன்

🕋 Solat Isyak
இஷா தொழுகை

🍽 Tabruk
உணவு உபசரிப்பு.

Sekian,  Terima Kasih.
AJK Madrasah
——————————

05 September 2019

Majlis Ceramah Khas Sempena hari Asyura

Majlis Bacaan yasin & Ceramah Khas Sempena hari Asyura
ஆஷுரா தின சிறப்பு சொற்பொழிவு

🗓 05.09.2019 Malam Jumaat
வெள்ளி இரவு

⏰ 08.15 - 9.30 mlm
இரவு 08.15 - 09.30 மணி வரை.

🕌 Madrasah Imam Ghazzali, BBS Fasa 2B
மதரஸா இமாம் கஸ்ஸாலி, செலாயாங்.
-----------------------------
📖 8:15 Yasin & Khatam Al-Quran
யாசீன் & குர்ஆன் நிறைவு துஆ

🎙 8.45 Ceramah khas oleh Ustaz Sathak Maslahi
சிறப்பு பயான்

9:15 Solat Isyak
இஷா தொழுகை

9:30 🍽 Tabruk உணவு உபசரிப்பு

Sekian, Terima Kasih.
AJK Madrasah
_________________
🌐migselayang.blogspot.com
📧 migselayang@gmail.com
fb.com/MadrasahImamGhazali
📱0105624786

30 August 2019

Majlis Sambutan Awal Muharram  1441 H

Assalamualaikum.
Semua dijemput hadir ke Majlis Sambutan Awal Muharram  di
🕌 Madrasah Imam Ghazzali - Selayang.

📋 Tarikh: 31 Ogos 2019 (Sabtu)
⏰ 6:45 ptg - 9:00 mlm

⏩ Aturcara ⏪
🔹 Bacaan Doa Akhir Tahun
🔹 Jamuan Ringan
🔹 Solat Maghrib
🔹 Bacaan Doa Awal Tahun
🔹 Ceramah Khas
🔹 Solat Isyak
🔹 Tabruk

Sekian Wassalam
----------------
AJK, MIG

08 August 2019

Majlis Zikir dan Doa perdanaசிறப்பு திக்ரு & துஆ மஜ்லிஸ்

⭐⭐⭐⭐⭐⭐⭐
Majlis Zikir dan Doa perdana
சிறப்பு திக்ரு & துஆ மஜ்லிஸ்
Doa khas dipimpin oleh *Syeikh Zainal Abidin Bafaki Tangal* (keturunan Rasulullah SAW yang ke 38), Naib Presiden, Markazu Saquafathi Sunniyya, Kozhikode, Kerala, India.
⭐⭐⭐⭐⭐⭐⭐
 08.08.2019 Malam jumaat
⏰ *08.30 - 10:00 mlm*
 Madrasah Imam Ghazzali, BBS Fasa 2B
-----------------------------
 *Bacaan Yaasin*
சூரா யாசீன்
 *Tazkirah*
      சிற்றுரை
 *Solat Isyak*
இஷா தொழுகை
爐 *Majlis Zikir & Doa Khas*
திக்ரு & சிறப்பு துஆ
 *Tabruk*
உணவு உபசரிப்பு.
Sekian,  Terima Kasih.
*AJK Madrasah*
——————————
 migselayang@gmail.com
fb.com/MadrasahImamGhazali
+60105624786

09 May 2019

Ramadhan 1440 H - 2019 M | ரமளான் நிகழ்ச்சிகள் - 2019



Istimewa Ramadhan
🌟🌟🌟🌟🌟🌟

🕌 Madrasah Imam Ghazzali,
 Taman Bandar baru Selayang fasa 2B,

🗓 Sepanjang Ramadhan ( Bermula 05.05.2019 Hari Ahad Malam Isnin )

🔹 Solat Isyak 8:45 mlm
🔹 Solat Tarawih 9:00 mlm
🎙 Tazkirah 10:10
🍽 Tabruk 10:15
------------------------
Semua Muslimin dan muslimat di jemput hadir.
Sekian, Terima kasih.
----------------
AJK, MIG.

புனித ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்
🌟🌟🌟🌟🌟🌟🌟

🕌 மதரஸா இமாம் கஸ்ஸாலி
 தாமன் பண்டார் பாரு செலாயாங் fasa 2B.

🗓 05.05.2019 ஞாயிறு மாலை  திங்கள் இரவு தொடங்கி ரமலான் மாதம் முழுவதும்

🔹 இஷா தொழுகை ஜமாஅத் இரவு 8.45மணி
🔹 தராவீஹ் தொழுகை இரவு 9:00 மணி
🎙 சிற்றுரை  இரவு 10:10 மணி.
 🍽 தப்ரூக் உணவு 10.15 மணி
------------------------
 இந்நிகழ்வுகளில் அனைத்து முஸ்லிம்களும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
----------------------
 இப்படிக்கு,
நிர்வாகம் MIG

20 March 2019

5th Anniversary - MIG மதரஸா இமாம் கஸ்ஸாலியின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழா


என் அன்பான இஸ்லாமியசொந்தங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி நமது மதரஸா இமாம் கஸ்ஸாலியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா
Experimental Hall, Universiti Islam Antarabangsa Malaysia (UIA) ல்  விமரிசையாக நடைபெறவுள்ளதுஉள்ளது.

மாலை 5 மணிக்கு தொடங்கும் அந்நிகழ்வின் ஆரம்பமாக சுற்றுவட்டார மதரசாக்கள் இணைந்து பங்குபெறும் மக்தப் திறனாய்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தொடர்ந்து மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு முக்கியப் பிரமுகர்கள் ஆன்றோர்கள் வாழ்த்துரைக்கு பிறகு முத்தான மூன்று அறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறும்.
இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மதரசாவின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றனர்.

நிகழ்ச்சி வெற்றி பெற அனைவரும் துஆ செய்வதுடன் தங்கள் சுற்றம் சூழ அந்நிகழ்விற்கு வருகை தந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

இப்படிக்கு,
நிர்வாகம்,
மதரஸா இமாம் கஸ்ஸாலி,
செலாயாங்.

10 February 2019

துவான் முன்ஷீ அப்துல்லாஹ்

முன்ஷி அப்துல்லா பின் அப்துல் காதிர் மலேசிய இலக்கிய மறுமலர்ச்சியின் தந்தைஇவர்.

இவருடைய மூதாதை ஷெய்கு அப்துல் காதிர் எமன் நாட்டிலிருந்து இந்தியா வந்து நாகூரில் குடியேறி வாழ்ந்து வந்தார். அவரின் மூத்த மகன் இப்ராஹிம் பொருளீட்டுவதற்காக மலாக்கா வந்து குடியேறினார். இவர்களின் பரம்பரையில் தான் அப்துல்லாஹ் மலாக்காவில் வைத்து கிபி 1796 ஆகஸ்ட் 12-ஆம் நாள்  பிறந்தார்.

இளமையில் இவருடைய தந்தை இவரை ஒரு தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பி வைத்து தமிழ் பயில செய்தார். இதைப்பற்றி இவர்தம் வரலாற்றில்,
" இந்திய மொழியான தமிழை கற்பதற்கு என் தந்தை என்னை ஓர் ஆசிரியரிடம் அனுப்பினார். என் முன்னோர் காலம் முதற்கொண்டு வளமாக வாழ்ந்த எங்களின் குடும்பத்தில் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பது வழக்கம். கூட்டல், கழித்தல் முதலிய கணக்கு போடவும், கணக்குகள் எழுதவும் பொருளீட்டவும் தமிழ் பயன்பட்டது.

மலாக்காவில் இருந்து ஏராளமான இந்திய வணிகர்கள் வணிகத்தின் மூலம் பெரும் பொருள் ஈட்டி வளமாக வாழ்ந்தனர். அவர்கள் தம் மக்களுக்கு தமிழையே கற்பித்தனர். எனக்கு தமிழ் கற்றுத் தந்த ஆசிரியருக்கு என் தந்தை பணமும் ஆடைகளும் அன்பளிப்புச் செய்தார்."  என்று  கூறுகிறார்.

தன் தந்தையிடமே மலாய் மொழியை பயின்ற இவர் பல மலாய் மொழி நூற்களைத் தாமே பயின்று அம்மொழி அறிவை அபிவிருத்தி செய்து கொண்டார்.

கி.பி. 1819 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நகரம் தோன்றிய பொழுது அங்கு குடியேறி வாழ்ந்த இவர் மொழிபெயர்ப்பாளராகவும் ஐரோப்பியர்களுக்கு மலாய் மொழி போதிக்கும் ஆசிரியராகவும் அமெரிக்கப் பாதிரிமார்களுக்கு மலாய் மொழியில் பாடப் புத்தகங்கள் எழுதிக் கொடுப்பவராகவும் கடிதங்கள் எழுதுபவராகவும் பணியாற்றினார் இதன் காரணமாக இவருக்கு 'ஆசிரியர்' என்று பொருள்படும் "முன்ஷி" என்னும் பெயர் ஏற்பட்டது.

கிபி 1838 ஆம் ஆண்டில் இவர் மலாக்காவிலிருந்து கிழக்குக் கடற்கரையோரமாக மலேசியா நாடு முழுவதும் பயணம் செய்து மலாய் மொழியில் பிரயாண நூல் எழுதினார். இதில் இவர் கையாண்டுள்ள வசனநடை மலாய் மொழியின் வசன நடைக்கே ஒரு முன் மாதிரியாக இருந்தது.

கிபி 1843 இல் இவர் தம் வரலாற்றை 'ஹிகாயத் அப்துல்லாஹ்' என்ற பெயருடன் எழுதி முடித்து அதனை ஆங்கில ஆளுநர் பட்டர்வொர்த்துக்கு அர்ப்பணம் செய்துள்ளார்.
அதில் ஓரிடத்தில், மலேசிய சுல்தான்கள் இந்தியாவிலிருந்து வந்த தமிழ் முஸ்லிம் அறிஞர்களிடம் குர்ஆனை ஓதினர் என்றும் தாம் சுல்தானுக்கு அமைச்சராக இருந்ததாகவும் அந்த சுல்தான் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் தம்மிடமே ஒப்படைத்திருந்தார் என்றும் குறிப்பிடுகிறார்.

'செர்மின் மதா' என்னும் பத்திரிகையில் இவருடைய கட்டுரைகள் அடிக்கடி வெளிவந்துகொண்டிருந்தன.
மக்காவுக்கு ஹஜ் செய்ய சென்ற இவர் மக்கா வந்தடைந்த சில நாட்களில் 1854 அக்டோபரில் அங்கேயே இறப்பெய்தினார்.
ஜித்தா வந்த வரையில் எழுதிய பயணக்கட்டுரை மேலே குறிப்பிடப்பட்ட பத்திரிக்கையில் வெளிவந்தது.

மலேசியா வரலாற்றையும் "ஷெஜரா மெலாயு" எனும் பெயரில் எழுதினார். அது நூலுருவில் வெளிவந்துள்ளது.

மொத்தத்தில் இவர் மலேசிய மொழி மேம்பாட்டிற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அளித்துள்ள சேவையை நன்றி மறக்காமல் இந்த நாட்டு மக்கள் அவரது பெயரில் தெருக்களும் பள்ளிக்கூடங்களும் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

07 February 2019

Majlis Maulid Qutbul Majid (Ral) குத்புல் மஜீத் நாகூர் பாதுஷா நாயகம் (ரலி) நினைவேந்தல்


Assalamu Alaikum Wrh Wbt Tuan/Puan. Kami mewakili Madrasah Imam Ghazzali, amat berbesar hati untuk menjemput Tuan/Puan ke *Majlis Maulid Qutbul Majid Shahul Hamid Naghoori (Ral)*

🗓 07.02.2019 Malam jumaat* வெள்ளி இரவு

⏰ *08.00- 09:30 mlm*
இரவு 08:00- 09:30 மணி வரை.

🕌 *Madrasah Imam Ghazzali, BBS Fasa 2B*
மதரஸா இமாம் கஸ்ஸாலி, செலாயாங்.
-----------------------------
📚 *bacaan Maulid*
மவ்லித் ஓதுதல்

📖 *Surah Yasin*
சூரா யாசீன்

📖 *Khatmul Quran*
குர்ஆன் நிறைவு துஆ

🕋 *Solat Isyak*
இஷா தொழுகை

🎙 *Ceramah Khas*
 சொற்பொழிவு

🍽 *Tabruk*
உணவு உபசரிப்பு.

 Sekian,  Terima Kasih.
*AJK Madrasah*
——————————
🌐 www.fb.com/MadrasahImamGhazali
📱https://wa.me/60105624786