29 March 2014

புதிரும் பதிலும் 8

மறுமையில் கடும் வேதனைக்குரியவர்கள் என்று நபி (ஸல்)அவர்கள் யாரை எல்லாம் குறிப்பிட்டார்களோ அவர்களில் சிலரைக் கூறமுடியுமா?

உருவப்படம் வரைபவர்கள்
அவர்களிடம் அல்லாஹ் கூறுவான் நீங்கள் வரைந்த இந்த உருவத்திற்கு உயிர் கொடுங்கள் என்று. உயிர் கொடுக்க முடியுமா?  முடியாது. அதனால் அவர்களை அல்லாஹ் கடுமையாக வேதனை செய்வான்.


குர்ஆனை  ஓதி மனனம் செய்து அதை மறந்தவர்கள்

நபி (ஸல்) கூறினார்கள்:
என்னுடைய உம்மத்தின் நன்மை தீமை எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது. அதில் ஆகப் பெரிய குற்றமாக எனக்குக் காட்டப்பட்டது என்ன தெரியுமா?
குர்ஆனை  ஓதி மனனம் செய்து அதை மறப்பதுதான்

பதில் எழுதிய அறிவு ஜீவிகள்:
முனவ்வர் பாத்திமா முஹம்மது நஜீப் 
ஆரிபீன் பின் தாஹிர் 

இந்த வாரக் கேள்வி:

1.மறுமையில் நான்கு கேள்விகளுக்கு பதில் கூறாமல் நழுவ முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய அந்த நான்கு கேள்விகள் என்ன?

2.அல்லாஹ் இந்த உம்மத்திற்கு ஐந்து வக்து தொழுகைகளை கடமையாக்கினான். ஆனால் நமக்கு முன்பே ஒவ்வொரு வக்தும் ஒவ்வொரு நபிக்கு வணக்கமாக வழக்கத்தில் இருந்தது. 
எந்தெந்த நபிக்கு எந்தெந்த தொழுகை வணக்கமாக இருந்தது?
 பதில் எழுதி வாருங்களேன் !

19 March 2014

புதிரும் பதிலும் -7

சென்ற வாரக் கேள்வி:
இதைக் காலையில் ஓதினால் மாலை வரையிலும் மாலையில் ஓதினால் மறுநாள் காலை வரையிலும்  எழுபதாயிரம் வானவர்கள் நமக்காக பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருப்பார்கள் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அது என்ன?

 أَعَوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ    மூன்று முறை
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ () هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ () هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ () மூன்று முறை
இவற்றை ஓதினால் எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக பாவமன்னிப்புத் தேடிக்கொண்டே இருப்பார்கள். யதார்த்தமாக அன்று அவர் இறந்து விட்டாலும் (ஷஹீத்) தியாகியாக மரணிப்பார். 



லூத் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் சமுதாயம் ஓரினச்சேர்க்கையில் தொடர்ந்து ஈடுபட்டபோது அவர்களை அல்லாஹ் அழித்தானே.. அந்த இடம் என்ன?

சாக்கடல் அல்லது இறந்த கடல் (Dead Sea,   البحر الميت) என்னும் நீர்நிலைதான் அது.  மேற்குக் கரை, இசுரேல்,யோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின் யோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது. இக் கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது சாக்கடல் அல்லது இறந்தகடல் என அழைக்கப்படுகிறது.
377மீட்டர் (1237 அடி) ஆழமுடைய சாக்கடல், பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து தற்போது 423 மீட்டர் (1388 அடி) கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல் ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது.
சாக்கடலின் நீளம் 67 கி.மீ (42 மைல்); மிகுதியான அகலம் 18 கி.மீ (11 மைல்). இதற்கு யோர்தான் ஆற்றிலிருந்தே பெருமளவில் நீர் கிடைக்கிறது. சாக்கடலுக்கு அடியிலும் அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும் உருவாகியுள்ளன.
சாக்கடலின் உவர்ப்புத் தன்மையால் நீருள் மூழ்காமல் மிதக்கும் நிலையைப் படத்தில் காணலாம்

பதில் எழுதிய அறிவுஜீவிகள் :
முனவ்வர் பாத்திமா முஹம்மது நஜீப்
நூருல் பசீலா 

11 March 2014

புதிரும் பதிலும்-6

சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும்; எந்த வாசல் வழியாக வேண்டுமானாலும் நுழையட்டும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் அறிவிக்கப்பட்டோர் யார்? யார்?

1. யார் உளூ வைப் பரிபூரணமாகச் செய்து பின்னர் இந்த துஆவை ஓதுகிறாரோ
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ المُتَطَهِّرِينَ، 
அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் வழியாக உள்ளே நுழைவார்.
என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள். 1

2. கபீசா பின் முகாரிக் (ரலி) எனும் ஒரு சஹாபி நபிகள் நாயகம்  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, "நாயகமே நான் வயதான முதியவன். அதிக மறதி உள்ளவன். எனவே எனக்கு அதிமாகக் கூறாமல் கொஞ்சம் சொல்லித் தாருங்கள்!
நபிகள் நாயகம்  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "நான் உமக்கு ஒரு துஆவைக் கற்றுத் தருகிறேன். அதை காலைத் தொழுகைக்குப் பிறகு மூன்று முறை கூறுவீராக! அவ்வாறு ஓதினால்  வெண்குஷ்டம், கருங்குஷ்டம், பக்கவாத நோய், பைத்தியம் இவைகளை விட்டும்  அல்லாஹ் உம்மைக்  காப்பாற்றுவான். உமக்கு சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும்.2
அந்த துஆ இதுதான்:
اللَّهُمَّ اهْدِنِي مِنْ عِنْدَكَ، وَأَفِضْ عَلَيَّ مِنْ فَضْلِكَ، وَأَسْبِغْ عَلَيَّ نِعْمَتَكَ، وَأَنْزِلْ عَلَيَّ بَرَكَتَكَ

ஒரு பெண் ஐவேளைத் தொழுது, கடமையான நோன்பு நோற்று, கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து, கற்பைப் பேணி நடந்தால் அந்த பெண்ணுக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும்.

பதில் தந்த அறிவு ஜீவிகள் :
முனவ்வர் பாத்திமா 
நூர் ஃபசீலா 
------------------------------------------------------
1-عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الوُضُوءَ ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ المُتَطَهِّرِينَ، فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ "
2-إِنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهُ قَبِيصَةُ بْنُ الْمُخَارِقِ قَدِمَ عَلَيْهِ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا خَالَاهُ أَتَيْتَنِي بَعْدَمَا كَبُرَتْ سِنُّكَ وَرَقَّ عَظْمُكَ وَاقْتَرَبَ أَجَلُكَ» فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ أَتَيْتُكَ بَعْدَمَا كَبُرَتْ سِنِّي وَرَقَّ عَظْمِي وَاقْتَرَبَ أَجْلِي وَافْتَقَرْتُ فَهُنْتُ عَلَى النَّاسِ، قَالَ فَبَكَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِقَوْلِهِ: افْتَقَرْتُ فَهُنْتُ عَلَى النَّاسِ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ أَفِدْنِي فَإِنِّي شَيْخٌ نَسِيَ وَلَا تُكْثِرْ عَلَيَّ، قَالَ: " أُعَلِّمُكَ دُعَاءً تَدْعُو اللَّهَ عَزَّ وَجَلَّ بِهِ كُلَّمَا صَلَّيْتَ الْغَدَاةَ ثَلَاثَ مَرَّاتٍ؛ فَيَدْفَعُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْكَ الْبَرَصَ وَالْجُنُونَ وَالْجُذَامَ وَالْفَالِجَ، وَيَفْتَحُ لَكَ بِهَا ثَمَانِيَةَ أَبْوَابِ الْجَنَّةِ تَقُولُ: اللَّهُمَّ اهْدِنِي مِنْ عِنْدَكَ، وَأَفِضْ عَلَيَّ مِنْ فَضْلِكَ، وَأَسْبِغْ عَلَيَّ نِعْمَتَكَ، وَأَنْزِلْ عَلَيَّ بَرَكَتَكَ "

08 March 2014

புதிரும் பதிலும்-5

  • இந்த பூமியில் மாளிகை வாங்க எத்தனையோ லட்சம் வேண்டும். ஆனால் சுவனத்தில் மாளிகை வாங்க 12 ............ இருந்தால் போதும். நபியவர்கள் குறிப்பிட்ட அந்த 12 என்ன?
  • இரண்டு கடல்கள்; ஒன்று மதுரமான இனிப்பு நீர். மற்றொன்று உப்புநீர். இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டுதான் இருக்கிறது; அனாலும் அவை ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை. இரண்டுக்குமிடையே மறைமுகமான தடுப்பு உண்டு என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَهُوَالَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هَذَاعَذْبٌ فُرَاتٌ وَّهَذَامِلْحٌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًامَّحْجُوْرًا
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)
அந்த இரண்டு கடல் சந்திக்கும் இடம்' எங்கு உள்ளது?
பதில்கள்:
சுன்னத் முஅக்கதா 12 ரகஅத்  தினமும் தொழுது வந்தால் சுவனத்தில் மாளிகை கிடைக்கும் 
حديث عائشة رضي الله عنها الذي أخرجه النسائي أن النبي صلى الله عليه وسلم قال: من ثابر على اثنتي عشرة ركعة بنى الله عز وجل له بيتا في الجنة: أربعا قبل الظهر، وركعتين بعد الظهر، وركعتين بعد المغرب، وركعتين بعد العشاء، وركعتين قبل الفجر. 
அருமை நாயகம்(ஸல்)அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: யார் அனுதினமும் 12 ரகஅத்  சுன்னத் தொழுது வருகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். லுஹருக்கு முன் 4 ரகஅத், லுஹருக்குப் பின் 2 ரகஅத், மக்ரிபுக்குப் பின் 2 ரகஅத் இஷாவிற்குப் பின் 2 ரகஅத், பஜ்ருக்கு முன் 2 ரகஅத் ஆகியவை ஆகும்.

இரண்டு கடல்கள் சந்திக்கும் இடம்: மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லுகிறது.

பதில் எழுதிய அறிவு ஜீவிகள்:
ஆதம் ஹமிதா 
HRM 
நஜீப் அலி- முனவ்வர் பாத்திமா 
நூர் பசீலா 
ஆரிபீன் பின் தாஹிர்