19 March 2014

புதிரும் பதிலும் -7

சென்ற வாரக் கேள்வி:
இதைக் காலையில் ஓதினால் மாலை வரையிலும் மாலையில் ஓதினால் மறுநாள் காலை வரையிலும்  எழுபதாயிரம் வானவர்கள் நமக்காக பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருப்பார்கள் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அது என்ன?

 أَعَوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ    மூன்று முறை
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ () هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ () هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ () மூன்று முறை
இவற்றை ஓதினால் எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக பாவமன்னிப்புத் தேடிக்கொண்டே இருப்பார்கள். யதார்த்தமாக அன்று அவர் இறந்து விட்டாலும் (ஷஹீத்) தியாகியாக மரணிப்பார். 



லூத் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் சமுதாயம் ஓரினச்சேர்க்கையில் தொடர்ந்து ஈடுபட்டபோது அவர்களை அல்லாஹ் அழித்தானே.. அந்த இடம் என்ன?

சாக்கடல் அல்லது இறந்த கடல் (Dead Sea,   البحر الميت) என்னும் நீர்நிலைதான் அது.  மேற்குக் கரை, இசுரேல்,யோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின் யோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது. இக் கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது சாக்கடல் அல்லது இறந்தகடல் என அழைக்கப்படுகிறது.
377மீட்டர் (1237 அடி) ஆழமுடைய சாக்கடல், பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து தற்போது 423 மீட்டர் (1388 அடி) கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல் ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது.
சாக்கடலின் நீளம் 67 கி.மீ (42 மைல்); மிகுதியான அகலம் 18 கி.மீ (11 மைல்). இதற்கு யோர்தான் ஆற்றிலிருந்தே பெருமளவில் நீர் கிடைக்கிறது. சாக்கடலுக்கு அடியிலும் அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும் உருவாகியுள்ளன.
சாக்கடலின் உவர்ப்புத் தன்மையால் நீருள் மூழ்காமல் மிதக்கும் நிலையைப் படத்தில் காணலாம்

பதில் எழுதிய அறிவுஜீவிகள் :
முனவ்வர் பாத்திமா முஹம்மது நஜீப்
நூருல் பசீலா 

No comments:

Post a Comment