23 May 2016

புனித லைலத்துல் பராஅத் சிறப்பு மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் வழமை போல் 
இவ்வாண்டும் புனித லைலத்துல் பராஅத் சிறப்பு மஜ்லிஸ் 
மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.. 

மஃரிப் தொழுகைக்குப்பிறகு மூன்று யாஸீன்கள் 

ஓதி துஆச்செய்யப்பட்டது



இஷாத் தொழுகைக்குப் பிறகு,மௌலானா மௌலவி
முஹம்மது ஹஸ்ஸான் நிஜாமி அல் புஹாரி ஹழ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.




பின்பு தஸ்பீஹ் தொழுகை, மற்றும் மாபெரும் திக்ரு 
மஜ்லிஸ் இன்னும் சிறப்பு துஆ மஜ்லிஸும்,நடைபெற்றது.
இறுதியாக நள்ளிரவில்,செலாயாங் கப்ருஸ்தான் சென்று 
ஜியாரத்தும் நடைபெற்றது.இப்புனித மஜ்லிஸில் ஏராளமான 
முஸ்லிமான ஆண் பெண்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் 
அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.


சிறப்பான ஏற்பாடுகளை நிர்வாகத்தினரும்,உஸ்தாது களான 
மவ்லவி சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஹழ்ரத்
மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பஈ 
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.வஸ்ஸலாம்.

புனித இஸ்ராஃ மிஃராஜ் சிறப்பு மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் வழமை போல் 
இவ்வாண்டும் புனித இஸ்ராஃ மிஃராஜ் இரவு மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்..







05 May 2016

புனித இஸ்ராஃ மிஃராஜ் நிகழ்ச்சி -2016

அல்ஹம்து லில்லாஹ்.. 
நம் மதரசா இமாம் கஸ்ஸாலியில் வழமை போல் இவ்வாண்டும் புனித இஸ்ராஃ மிஃராஜ் இரவு மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

மக்ரிபு தொழுகையிலிருந்தே மக்கள் சாரை சாரையாக வந்து குழுமத் தொடங்கினர்.\
மதரசா கொஞ்சம் விஸ்தீரிக்கப்ப்பட்டு புதிதாக கார்பெட் போடப்பட்டு புதுப் பொலிவுடன்  காட்சி அளித்ததது.
மதரசா இமாம் கஸ்ஸாலி

madrasah imam ghazzali

  • இஷா விற்குப் பிறகு தேநீருக்காக சிறிது இடைவேளை,
  • அதைத் தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு
  • திக்ரு, துஆ வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.



சிறப்பான ஏற்பாடுகளை நிர்வாகத்தினரும் உஸ்தாது களான மவ்லவி சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி, மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பஈ ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

03 May 2016

புனித மிஃராஜ் இரவின் சிறப்பு நிகழ்ச்சி


ன்ஷா அல்லாஹ் நமது மதரஸா இமாம் கஸ்ஸாலியில் வரும் 04.05.2016 புதன் மாலை வியாழன் இரவு 8.00 மணி முதல் 10.30 வரை புனித மிஃராஜ் இரவின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடை பெறும்.

இஷா தொழுகைக்குப் பிறகு சிறப்பு பயான், திக்ரு மஜ்லிஸ் நடைபெறும். 
நிகழ்ச்சிகளை மதரஸாவின் ஆசிரியப் பெருமக்கள் உஸ்தாத் மவ்லவி ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹியும் உஸ்தாத் மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பயீ ஆகியோர் சிறப்பாக வழிநடத்துவார்கள்