06 June 2020

History of Madrasah Imam Ghazzali

அல்லாஹ்வின் அருளால் நமது மதரஸா இமாம் கஜ்ஜாலி 
துவக்கம்
2014 jun 22
1435 syaaban 24
Yb dato haji jawahar Ali அவரகளால் முறையாக தொடங்கி வைக்கப்பட்டது.

அதுசமயம்
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மரியாதைக்குரிய மௌலானா அல்ஹாஜ் ஹாஜா முயீனுத்தீன் பாகவி அவர்கள்,
கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா இமாம்
மரியாதைக்குரிய மௌலானா அல்ஹாஜ் எஸ்எஸ் அஹ்மத் பாகவி அவர்கள்,
பினாங்கு மதரஸா தாருல் உலூம் தாவூதியாவின் முதல்வர் மரியாதைக்குரிய மௌலானா அல்ஹாஜ் முஹம்மது நபி அவர்கள் போன்ற சங்கைக்குரிய சான்றோர்களால் பிரார்த்தனை செய்யப்பட்டு துவங்கி வைக்கப்பட்டது.


இன்றைக்கும் அந்த அறிஞர்களின் மதிப்புமிக்க ஆலோசனைகள் எங்கள் மதரசாவிற்கு  கிடைத்துக்கொண்டே இருக்கிறது

தினசரி

திங்கள் கிழமையிலிருந்து வெள்ளிவரை காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை குர்ஆன் மனன வகுப்பு Tajfiz Al quran

குர்ஆன் வகுப்பு :மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி வரை ஒரு பிரிவாகவும் 7 30 லிருந்து 9 மணி வரை இன்னொரு பிரிவாகவும் மாணவர்களுக்கு Tajwid Tarannum என்கிற குர்ஆன் ஓதுகின்ற அழகிய முறையுடன் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

எத்தனை மாணவர்கள்..? 40

வாராந்திர நிகழ்ச்சி :

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவிலும் 8:00 மணியிலிருந்து 9:30 மணி வரை ஒரு வாரம் அஸ்மாவுல் ஹுஸ்னா மற்றொரு வாரம் கசிதா அல்புர்தா மற்றொரு வாரம் திக்ரு மஜ்லிஸ்  என்று ஓதப்பட்டு சிறப்பான துவா பிரார்த்தனை செய்யப்படுகிறது.
இஷா தொழுகைக்குப் பிறகு solat hajat 2 ரக்அத் 

அதில் சுற்றுவட்டார மக்கள் மிக திரளாக கலந்து கொள்கிறார்கள் அல்லாஹ்வுடைய கிருபையினால் 100 நூற்றில் இருந்து 120 நபர்கள் வரைக்கும்கூட கலந்து கொள்கிறார்கள்.

இடப்பற்றாக்குறை வெளியில் இரண்டு பந்தல்கள் ரமலான் விசேஷ காலங்களில்

மாதம் இருமுறை kelas tafsir Al Quran
மாதம் இரண்டாவது வாரமும் நான்காவது வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 8 30 இலிருந்து 9 30 வரை குர்ஆன் விரிவுரை வகுப்பு சட்ட விளக்கமும் நடைபெறுகிறது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான இந்நிகழ்வில் திரளாக மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

சிறப்பு தின நிகழ்ச்சிகள்

அவ்வ்ல் முஹர்ரம்
Maghrib  முன்பு வருட கடைசி துஆ
மஃரிப் தொழுகைக்கு பிறகு வருடத்தின் துவக்க துஆ ஓதப்பட்டு சிறப்புரை நடைபெறும்

ஆஷூரா தின நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கப்பட்டு ஆஷூரா தினத்தில் ஓதவேண்டிய திக்ரு மற்றும் துஆக்கள் நடைபெறும்
ஆஷூரா நோன்பு திறப்பதற்கு சுற்றுவட்டார பெருமக்கள்  அதிலும் குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளிலிருந்து சொந்தமாக அவரவர்களுக்கு இயன்ற பலகாரங்களை சமைத்து எடுத்துக் கொண்டு வந்து எல்லோரும் ஒன்றாக பகிர்ந்துண்டு நோன்பு திறக்க காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ரபியுல் அவ்வல் மௌலிது ரசூல்
ரபியுல் அவ்வல் பிறை ஒன்றிலிருந்து 12 வரை 12 இரவுகள் மகரிப் தொழுகைக்கு பிறகு சுபஹான மௌலூது ஓதப்பட்டு இஷாவுக்கு பிறகு உரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெறும்.
அந்த 12 தினங்களில் வார விடுமுறை நாட்களில் மட்டும் வெளியிலிருந்து சிறப்பு பேச்சாளர்கள் அழைக்கப்பட்டு சுமார் ஒரு மணிநேரம் சிறப்பான உரை நிகழ்த்தப்படும் மக்கள் பயன்பெறுவார்கள்.

அதே மாதத்தில் ஒரு நாள் பொது மௌலிது என்று அழைக்கப்பட்டு மிகப்பெரும் விழா மதரஸா மாணவ மாணவியரின் அறிவார்ந்த நிகழ்ச்சிகளோடு விமரிசையாக நடைபெறும்.
ரபியுல் ஆகிர் மாதத்தில் ஒரு நாள் மட்டும் முகைதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நினைவு தினம் விமர்சையாக அனுசரிக்கப்படும் அன்று இரவு மௌலிது ஓதப்பட்டு சிறப்புரை நிகழ்த்தப்படும்

ரஜப் மாதம் 27வது இரவில் புனிதஇஸ்ரா  மிஃராஜ் நிகழ்ச்சி யில் விண்ணேற்ற பயணம் குறித்து சிறப்புரை நடைபெறும்.

அடுத்து ஷாபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் Nisfu Sya'ban சிறப்பு நிகழ்ச்சி மஃரிப் தொழுகைக்கு பிறகு அனைவரும் சேர்ந்து மூன்று முறை யாசீன் ஓதி மூன்று முக்கிய தேவைகளுக்காக பிரார்த்தனை செய்து அதற்குப்பிறகு இஷா தொழுகையை தொடர்ந்து அன்றைய தினம் செய்ய வேண்டிய சிறப்பு amalkal  குறித்து ஆர்வப் படுத்தப்பட்டு அந்த அமல்களும் நடைபெறும்.

ரமலான் கால சிறப்பு கொண்டாட்டம்
ரமலான் மாதம் முழுவதும் இரவு 8 45 முதல் இஷா தொழுகையுடன் தராவீஹ் தொழுகையும் வித்திடும் ஜமாஅத்தாக நடைபெற்று அதைத்தொடர்ந்து சிறப்பான சிற்றுரை நடைபெறும்
ரமளானின் இறுதிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிகாலை 4 மணிக்கு பக்தி பரவசத்துடன் கியாமுல் லைல் இரவுத் தொழுகை உருக்கமான பிரார்த்தனையுடன் நடைபெறும். தொடர்ந்து 5 மணிக்கு சஹர் உணவு வழங்கப்படும்.

அடுத்து துல்ஹஜ் பிறை ஒன்பதில் அரஃபா நோன்பு திறப்பு நிகழ்ச்சியும் தக்பீர் முழங்கும் நிகழ்வும் நடைபெறும்

மறுநாள் காலை துல்ஹஜ் 10 புனித ஹஜ்ஜுப் பெருநாளில் அதிகாலை எட்டு முப்பதுக்கு தொழுகை நடத்தப்பட்டு தொடர்ந்து 10 மணி இருந்து மதரசா சார்பாக   உள்ஹியா அறுத்து மக்களுக்கு பங்கீடு செய்யப்படும்.
மக்களின் ஒத்துழைப்பு..

பள்ளிக்கூட விடுமுறை காலங்களில் சிறப்பு வகுப்பு நடைபெறும் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்கள் காலை 9 மணியிலிருந்து மதியம் ஒரு மணிவரை நடைபெறுகிற அந்த வகுப்பில் குர்ஆன் முக்கியமான சூராக்கள் மணனம் மற்றும் ஹதீஸ் மனப்பாடம் தொழுகை பயிற்சி ஆகியவை நடத்தப்படுவதுண்டு.

டிசம்பர் மாத இறுதியில் அந்த சிறப்பு வகுப்பு நிறைவு விழா நடத்தப்பட்டு அதில் மாணவ மாணவியருக்கு சான்றிதழுடன் பரிசும் வழங்கப்படும்

இந்த வருடம் ஒரு விசேஷம் வில்வித்தை போட்டி.

கடந்த வருடங்களில் இந்த சிறப்பு வகுப்பில் தியான பயிற்சி மூச்சுப் பயிற்சி மன ஒருமை பயிற்சி தன்முனைப்பு பயிற்சி இயற்கையை உணவு சுகாதார பயிற்சி முதலுதவி பயிற்சி போன்றவை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதைவிட மிகச் சிறப்பான ஒன்று.
Kimpulan qasidah Ar Ridha
அல்லாஹ் ரசூலின் பிரியத்தை இறை நம்பிக்கையை அதிகப்படுத்தும் விசேஷமான பக்தி பாடல்கள் கஸீதாக்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட தஃப் முறையுடன் நமது மாணவர்கள் பாடுவார்கள்.

5 ஆம் ஆண்டு நிறைவு விழா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐந்து வருட நிறைவு விழாவை மிக விமர்சையாக... நம்ம  Adun YB Tuan  Mohd Sany  Bin Hamzan அவர்களுடன் கொண்டாடியது மறக்க முடியாது. காரணம் அந்த விழாவில் நமது அருகருகே அமைந்திருக்கின்ற மதரஸா களையும் அழைத்து மாணவர்களுக்கு போட்டி வைத்து அதில் உரையாடல், நாடகம் போன்ற விறுவிறுப்பான பல்சுவை நிகழ்ச்சிகளும் நடத்தியது மக்களின் பெருத்த ஆதரவை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் அழகிய வண்ணப் படங்களுடன் வெளியிட்டோம்.

விடுமுறை நாட்களில் வாரத்திற்கு இரண்டு நாள் தினங்கள் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி நடைபெற்றது தற்போது அது இடையில் நின்று விட்டாலும் மறுபடியும் அதை தொடங்குவதற்கு திட்டமிட்டிருக்கிறோம்
இதைவிட இன்னும் எத்தனையோ சிறப்பான திட்டங்கள் இருந்தாலும் அவைகளை செயல்படுத்துவதற்கு போதிய கட்டிட வசதி இல்லை என்பதுதான் நிதர்சனம் இன்ஷா அல்லாஹ் அந்த இடத்தை சொந்தமாக வாங்கியதற்கு பிறகு சொந்த கட்டிடம் எழுப்பி இன்னும் நிறைவான சேவைகளை வழங்குவதற்கு ஆவலாய் இருக்கிறோம் அல்லாஹ் அதற்கு உதவி செய்ய வேண்டும்.