26 December 2013

முஹம்மது (சல்) வினாடி - வினா 3



51. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூங்கும் முன் என்ன செய்வார்கள்?
நபி (ஸல்) அவர்கள் தூங்கும் போது இஸ்மித் என்ற சூர்மாவை பயன்படுத்துவார்கள் ஏனெனில் அவை பார்வையை கூர்மையாக்கும் இமை முடியை வளரச்செய்யும்.

52. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் விருப்பமான ஆடை எது?
நபி (ஸல்) அவர்களின் விருப்பமான ஆடை, சட்டையாகவே இருந்தது.

53. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சட்டையின் கை எவ்வாறு இருந்தது?
நபி (ஸல்) அவர்களின் சட்டையின் கை மணிக்கட்டு வரை நீளமாக இருந்தது.

54. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் செருப்பு எவ்வாறு இருந்தது?
நபி(ஸல்) அவர்களின் செருப்பு இரண்டு வார்ப்பட்டையுடையதாக இருந்தது.

55. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எதை தடை செய்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் இடது கையால் சாப்பிடுவதையும், ஒரு செருப்பணிந்து நடப்பதையும் தடை செய்தார்கள்.

56. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மோதிரம் எவ்வாறு இருந்தது?
நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேல்பகுதியில் அபிஸீனியா நாட்டின் வேலைப்பாடு இருந்தது.

57. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மோதிரத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?
நபி (ஸல்) அவர்களின் மோதிரத்தில் 'முஹம்மது' என்ற ஒருவரியும் 'ரஸுல்' என்ற ஒருவரியும் 'அல்லாஹ்' என்ற ஒருவரியும் செதுக்கப்பட்டிருந்தது. 'நபி (ஸல்) அவர்கள் கழிப்பறைக்குச் சென்றால் தனது மோதிரத்தைக் கழற்றிவிடுவார்கள்'.

58. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மோதிரத்தை எந்த கரத்தில் அணிந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் வலது கையில் மோதிரம் அணிபவர்களாக இருந்தார்கள்.

59. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாள் எவ்வாறு இருந்தது?
நபி (ஸல்) அவர்களின் வாளின் கைப்பிடி வெள்ளியாலாகியிருந்தது.

60. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நிறத்;தில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் கருப்பு நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள்.

61. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு வேட்டி அணிந்திருந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் கெண்டை காலில் பாதி அளவு வரை வேட்டி அணிவார்கள்.

62. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு நடப்பார்கள்?
நபி (ஸல்) அவர்கள் நடக்கும்போது மேடான பகுதியிலிருந்து பள்ளமான இடத்தில் இறங்குவது போல் அடி எடுத்து வைப்பார்கள்.

63. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அமருவார்கள்?
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்தால் இரு கைகளையும் முழங்காலில் கட்டிக் கொண்டவர்களாக அமருவார்கள்.

64. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உணவருந்தமாட்டார்கள்?
நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு உணவருந்தமாட்டார்கள்.

65. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடித்த உடன் என்ன செய்வார்கள்?
நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடித்த உடன் விரல்களை மூன்று முறை சூப்புவார்கள்.

66. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எதை விரும்பி சாப்பிடுவார்கள்?
நபி (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டங்களை விரும்பி சாப்பிடுவார்கள்.

67. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள்?
நபி(ஸல்) அவர்கள் பேரீத்தம்பழத்துடன் தர்பூசணியையும் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.

68. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விரும்பிய குடிபானம்; எது?
இனிப்பும், குளிர்ச்சியும் உடையவை நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமான பானமாக இருந்தது.

69. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை எவ்வாறு அருந்துவார்கள்?
நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை நின்று கொண்டு அருந்துவார்கள்.

70. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அத்தர் விஷயமாக என்ன சொன்னார்கள்?
உங்களில் எவறுக்கேனும் நறுமணம் வழங்கப்பட்டால் அதை மறுக்க வேண்டாம் ஏனெனில் அது சொர்க்கத்திலிருந்து வந்ததாகும் என்றார்கள்.

71. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர்கள் எத்தனை?
27 போர்களாகும்.

72. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்? யார்?
11 மனைவிமார்கள் ஆகும்
1. அன்னை கதீஜா      (ரலி)
2. அன்னை ஆயிஷா     (ரலி)
3. அன்னை உம்முசலமா  (ரலி)
4. அன்னை சவ்தா  (ரலி)
5. அன்னை ஹஃப்ஸா  (ரலி)
6. அன்னை ஸைனப்பின்த் குஸைமா (ரலி)
7. அன்னை ஜுவைரிய்யா  (ரலி)
8. அன்னை உம்மு ஹபீபா  (ரலி)
9. அன்னை ஸஃபிய்யா  (ரலி)
10. அன்னை மைமூனா  (ரலி)
11. அன்னை ஸைனப்பின்த் ஜஹ்ஷ்  (ரலி)

73. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த ஆண்டு வஃபாத்தானார்கள்?
ஹிஜ்ரி 11ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் 12ம் தேதி (கி.பி 632) திங்கட்கிழமை வஃபாத்தானார்கள்.

74. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்?
மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலினுள் அமைந்துள்ள அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இன்னா லில்லாஹி..

75. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த கிழமை நல்லடக்கம்  செய்யப்பட்டார்கள்?
புதன் கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்

No comments:

Post a Comment