20 April 2014

வாள் ஒடியவில்லை.. நம் மதரஸாவின் ஒரு கால் ஒடிந்துவிட்டது!

நமது  "மதரஸா இமாம் கஸ்ஸாலி" யின் உறுப்பினரும், ஆலோசகருமான,அல்ஹாஜ் மர்ஹூம் ஸைஃபுல்லாஹ் அவர்கள் 30-03-2014  காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையையும் நல்ல பகரத்தையும் வழங்கிடுவானாக! ஆமீன்!!

ஸைஃபுல்லாஹ்- அல்லாஹ்வின் போர்வாள்!
இன்று ...
அந்த வாள் ஒடிந்து விட்டது..

வாள் ஒடியவில்லை..
நம் மதரஸாவின் ஒரு 
கால் ஒடிந்துவிட்டது.


அன்பு ..
இறக்கம் ..
சாந்தம் ..
கருணை ..
தயாளம்.. 
தாராளம்.. இப்படி 
ஏராளம் அவரது தன்மைகள்!

அந்த சிஃபாத்துகள்
இன்று வஃபாத்தாகி விட்டது.

அந்த 'தன்னடக்கம்' இன்று 
மண் அடக்கம் ஆகிவிட்டது.


ஹாஜி மர்ஹூம் சைபுல்லாஹ் அவர்களுக்காக தஹ்லீல் துஆ இரங்கல் நிகழ்வு

ஹாஜி மர்ஹூம் சைபுல்லாஹ் அவர்களுக்காக தஹ்லீல் துஆவும் இரங்கல் நிகழ்வும் நம் 'மதரஸா இமாம் கஸ்ஸாலி'யில் 05 ஏப்ரல் 2014 அன்று  நடைபெற்றது.

அன்னாருக்காக ஒரு பெருங்கூட்டம் நம் மதரஸாவில் திரண்டது. மதரஸா முழுதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நிர்வாகிகள், பெரியவர்கள், சங்கைக்குரிய உலமாப் பெருமக்கள், அன்னாரது குடும்பத்தினர், உறவினர், அன்பர்கள், நண்பர்கள், தாய்மார்கள், சகோதரிகள், மதரஸா மாணவச் செல்வங்கள் என எல்லோரும் திரண்டார்கள்.

70,000 எழுபதாயிரம் தஹ்லீலும் யாசீனும் ஓதப்பட்டு அன்னாரின் மலரும் நினைவுகள் எடுத்தியம்பப்பட்டு, மஸ்ஜித் இந்தியா தலைமை இமாம் மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ். அஹ்மது  பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்கள் துஆ ஓதி இரங்கல் உரை நிகழ்த்தினார்கள்.

அந்த இரங்கல் உரை இதுதான்:

வலிகள் கோமான் மௌலிது ஷரீஃப் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


அல்லாஹ்வின் கிருபையால் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப்   ரபீவுல் ஆகிர் பிறை 17- (15-02-2014) சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதில் ஒரு சிறுதொகுப்பு:
part 1

part 2

18 April 2014

கடன் தொல்லை உடனே நீங்க...

அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அறிவிக்கிறார்கள்: 
ஒருநாள் என் தந்தை அபூபக்கர் (ரலி) என்னிடம் வந்து வினவினார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குக் கற்றுத் தந்த ஒரு அருமையான துஆவை நீ நபியிடமிருந்து கேட்டிருக்கிறாயா?
“என்ன அது?”
"அந்த துஆவை நபி ஈஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களுக்குக் கூறினார்கள்: சீடர்களே! உங்களில் ஒருவருக்கு ஒரு தங்க மலையளவுக்குக் கடன் இருந்தாலும் இந்த துஆவின் மூலம் அல்லாஹ் அதை நிறைவேற்றிடுவான்: 

اللَّهُمَّ فَارِجَ الْهَمِّ، كَاشِفَ الْغَمِّ، مُجِيبَ دَعْوَةِ الْمُضْطَرِّينَ، رَحْمَانَ الدُّنْيَا وَالْآخِرَةِ وَرَحِيمَهُمَا، أَنْتَ تَرْحَمُنِي، فَارْحَمْنِي بِرَحْمَةٍ تُغْنِينِي بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ .

அபூபக்கர் (ரலி) கூறுகிறார்கள்: எனக்குக் கொஞ்சம் கடன் இருந்தது. அதை நான் விரும்பவில்லை. ஆகவே இந்த துஆவை நான் ஓதினேன். அதன் மூலம் அல்லாஹ் அக்கடனை நிறைவேற்றினான்.
ஆயிஷா (ரலி-அன்ஹா) கூறுகிறார்கள்:
அஸ்மா பின்த் உமைஸ் (ரலி-அன்ஹா) அவர்களுக்கு ஒரு தீனாரும் மூன்று திர்ஹமும் நான் கொடுக்கவேண்டி இருந்தது. அவர்கள் என்னைக் காண அடிக்கடி வருவார்கள். ஆனால் நான்தான் அவர்களைக் காண வெட்கமாக இருந்தது. ஏனெனில் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த என்னிடம் வழி இல்லாமல் இருந்தது.
எனவே இந்த துஆவை நான் ஓத ஆரம்பித்தேன்.
என்ன ஆச்சரியம்! சிறிது அவகாசத்திற்குள்  எனக்கு அல்லாஹ் ஒரு இரணம் தந்தான். அது சதகா (தானம்) அல்ல. வாரிசுச் சொத்தும் அல்ல. எதிர்பாராவிதமாக இறைவன் எனக்கு ஈந்தது.
ஆனால் அந்தப் பொருள் மூலம், 

  • என் கடனையும் அடைத்தேன்; 
  • என் குடும்பத்தினருக்கு நல்ல தொகையும் தந்தேன்; 
  • அப்துர்ரஹ்மான் அவர்களின் மகளுக்கு ஒரு நல்ல நகையும் வாங்கி அணிவித்தேன்; 
  • அதற்குப் பிறகும் சிறிது பொருள் மீதமிருந்தது.

 எனவே அன்பர்களே! இந்த துஆவை அனுதினமும் ஓதி அளவிலா ஆனந்தம் அடைவோமாக!
 கடன் தொல்லையில் அவதிப்பட்ட ஒரு தோழருக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த இன்னொரு துஆவும் உண்டு. அது படமாக (image) உங்களுக்கு தரப்பட்டுள்ளது. அதையும் காலை மாலை மூன்று முறை ஓதி வரலாம் :

11 April 2014

மலேசியத் தலைநகர் selayang இமாம் கஜ்ஜாலி மதரஸாவில் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப், வியாழன் மாலை வெள்ளி இரவு மிக விமர்சையாக நடைபெற்றது.

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

 மலேசியத் தலைநகர் selayang  இமாம் கஜ்ஜாலி மதரஸாவில் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப், ( 10-04-2014 ) வியாழன் மாலை
வெள்ளி இரவு ( ஜமாதுல் ஆகிர் பிறை 10- 1435 ) மிக விமர்சையாக நடைபெற்றது.



இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.



.நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் நிர்வாகிகள்,மற்றும் உறுப்பினர்களும்,சிறப்பு வாய்ந்த மௌலிது மஜ்லிஸிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் ஏராளமானோர் கலந்து கொண்டு ,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,
பெற்றுக்கொண்டார்கள். வஸ்ஸலாம்.




வெளியீடு ;- selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலி  (ரஹ்).

03 April 2014

நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் உறுப்பினரும்,ஆலோசகருமான அல்ஹாஜ் மர்ஹூம் ஸைஃபுல்லாஹ் அவர்கள் மறைவு !!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் உறுப்பினரும்,ஆலோசகருமான,அல்ஹாஜ் மர்ஹூம் ஸைஃபுல்லாஹ் அவர்கள்,30-03-2014  காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி 
வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம், 30-03-2014 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் selayang sungai tua கபரஸ்தானில் நடைபெற்றது.

அல்ஹாஜ் மர்ஹூம் ஸைஃபுல்லாஹ் அண்ணன் அவர்கள். பிறருக்கு  உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்.நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலிக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார்கள்.நான் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமளானுக்குள் குர்ஆன் முடிக்கவேண்டும் என்று குர்ஆனை கற்றுக்கொள்வதில் ரெம்ப ஆர்வம் கொண்டவர்களாய் இருந்தார்கள்.முதல் நாள் தஃப்ஸீர் வகுப்பில் ரெம்பவும் சந்தோஷமாக இருந்தார்கள் என்றும், நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள் மிகவும் கவலையுடன் கூறினார்கள்.இவர்களின் இளப்பு நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலிக்கு பேரிளப்பாகும்.இவர்களைப்போன்று பல நல்லுள்ளங்களை நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலிக்கு,அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்.ஆமீன் யாரப்பல் ஆளமீன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அல்ஹாஜ் மர்ஹூம் ஸைஃபுல்லாஹ் அண்ணன் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மதரஸாவின் அனைத்து நிர்வாகிகள்,ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்   நமது selayang  இமாம் கஜ்ஜாலி மதரஸாவினர்,மற்றும் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்  பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்! 

இன்ஷா அல்லாஹ் வருகின்ற (05-04-2014 ) சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு, நமது selayang  இமாம் கஜ்ஜாலி மதரஸாவில், மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா தலைமையில்,அல்ஹாஜ் மர்ஹூம் ஸைஃபுல்லாஹ் அண்ணன் அவர்களுக்கு குர்ஆன் ஷரீஃப் மற்றும் 70.000 ஸலவாத்துகள் ஓதி துஆச்செய்யப்படும். வஸ்ஸலாம். 


உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலி  (ரஹ்)