18 January 2014

வினா விடை -3 (18-01-2014)


சென்ற  வாரக் கேள்வி:
  1. பொறாமை கூடாது.. அப்படிப் பொறாமைப் படுவதாக இருந்தால் இருவரின் மீது பொறாமைப் படலாம் என்று அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறிய அந்த இருவர் யார்?
  2. நரகத்தை மறுமை நாளில் இழுத்துக் கொண்டு வரப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான். எத்தனை மலக்குகள் (வானவர்கள்) அதை இழுத்துக் கொண்டு வருவர் என்று நபி ஸல் கூறினார்கள் ?
  3.  நரகத்தில் வேதனை செய்ய எண்ணிலடங்கா வானவர்கள் இருந்தாலும் அவர்களை நிர்வகிக்கும் தலைமை வானவர்கள் எத்தனை பேர் என்று குர்ஆனில் வருகிறது?
பதில்கள்:
  • இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 

  1.  ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். 
  2.  இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புஹாரி :7529 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

  •  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள்.இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5464)
  •  அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். (அல்குர்ஆன் 74:30)
சரியான விடை எழுதிய பாராட்டுக்குரியவர்:

M. முனவ்வர் பாத்திமா 


No comments:

Post a Comment