16 January 2014

மாபெரும் மீலாது தொடர் சொற்பொழிவு – மார்க்க அறிவுப் போட்டி (1435-2014)


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
மதரஸா இமாம் கஸ்ஸாலி (ரஹ்) சிலாயாங், மலேசியா
மாபெரும் மீலாது தொடர் சொற்பொழிவு – மார்க்க அறிவுப் போட்டி
(1435-2014)
------------------------------------------------
1.  ஆதம் அலை அவர்கள் ஹவ்வா (அலைஹா) அவர்களுக்கு வழங்கிய மஹர் எவ்வளவு?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீது பத்து முறை ஸலவாத்து ஓதினார்கள் 
2.   யாரைப் பார்த்தாலும் “இவர் என்னை விடச் சிறந்தவர் என்று நினைத்த அந்த புனிதர் யார்?
ஹஸன் பஸரி (ரஹ்) 

3.   மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் வாழ்ந்த மதீனத்து மண்ணை செருப்புப் போட்டு மிதிப்பதா என்று மதினாவில் செருப்பு அணியாமல் வாழ்ந்த மாமேதை யார்?

இமாம் மாலிக் (ரஹ்)

4.      நபி ஸல் அவர்கள் அதிகம் விரும்பி சாப்பிட்ட காய் எது?

சுரைக்காய்.

5. அஜ்மீர் காஜா நாயகம் (ரலி அவர்கள் இந்தியாவில் சுமார் எத்தனை பேரை இஸ்லாத்தில் இணைத்தார்கள்?

99 லட்சம் மக்களை .

6.   மார்க்கத்தில் மூன்றில் இரண்டு பகுதியை நிறைவு செய்தவர் என்று யாரை நபியவர்கள் குறிப்பிட்டார்கள்?

திருமணம் செய்தவர்.

7. நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் வியர்வையைக் கூட சேமித்து அத்தராக பயன்படுத்திய பெண்மணி யார்?

உம்மு சுலைம் (ரலி-அன்ஹா )

8.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களைப் புகழ்ந்து கவி பாடுவதற்காக மஸ்ஜிதுன் நபவியில் மிம்பர் மேடை அமைத்துக் கொடுக்கப்பட்ட சஹாபி யார்?

ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி)

9. ஃபித்னத்துல் ஹர்ரா என்று அழைக்கப்படும் கலவரத்தில் மஸ்ஜிதுன் நபவி எத்தனை நாட்கள் அடைக்கப்பட்டது. (அல்லது) அப்போது மஸ்ஜிதுன் நபவிக்குள் மாட்டிக் கொண்ட அந்த நபர் யார்?

மூன்று நாட்கள்,   சயீத் இப்னுல் முசய்யப் (ரஹ்)

10. நபியின் 12வது வயதில் சிரியாப் பயணத்தின் இடையில் நபியின் தனிச் சிறப்புகளைக் கொண்டு அடையாளம் கண்டு கொண்ட அந்த பாதிரி (வேத ஞானி)யின் பெயர் என்ன?

புஹைரா.

No comments:

Post a Comment