நமது "மதரஸா இமாம் கஸ்ஸாலி" யின் உறுப்பினரும், ஆலோசகருமான,அல்ஹாஜ் மர்ஹூம் ஸைஃபுல்லாஹ் அவர்கள் 30-03-2014 காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையையும் நல்ல பகரத்தையும் வழங்கிடுவானாக! ஆமீன்!!
ஸைஃபுல்லாஹ்- அல்லாஹ்வின் போர்வாள்!
அந்த 'தன்னடக்கம்' இன்று
மண் அடக்கம் ஆகிவிட்டது.
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையையும் நல்ல பகரத்தையும் வழங்கிடுவானாக! ஆமீன்!!
ஸைஃபுல்லாஹ்- அல்லாஹ்வின் போர்வாள்!
இன்று ...
அந்த வாள் ஒடிந்து விட்டது..
வாள் ஒடியவில்லை..
நம் மதரஸாவின் ஒரு
கால் ஒடிந்துவிட்டது.
அன்பு ..
இறக்கம் ..
சாந்தம் ..
கருணை ..
தயாளம்..
தாராளம்.. இப்படி
ஏராளம் அவரது தன்மைகள்!
அந்த சிஃபாத்துகள்
இன்று வஃபாத்தாகி விட்டது.
மண் அடக்கம் ஆகிவிட்டது.
Tiada ulasan:
Catat Ulasan