25 Mei 2014

செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலி ( ரஹ் )வின் புனித இஸ்ராஃ, மிஃராஜ் இரவு நிகழ்ச்சி


செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலி ( ரஹ் )வில் இன்ஷா அல்லாஹ் வரும் 26-05-2014 ( 27 ரஜப் 1435 ) திங்கள் மாலை செவ்வாய் இரவு இஷாத் தொழுகைக்குப்பின், எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் '' மிஃராஜ் '' எனும் பயண நிகழ்வை,நினைவு கூறும் நிகழ்ச்சி, மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது.

அது சமயம் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள் விண்ணேற்றம் -- ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் சிறப்புப் பேருரை நிகழ்த்தி,சிறப்பு துஆச்செய்வார்கள்.இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதரஸாவின் நிர்வாகிகள் மிகச்சிறப்பாக செய்துள்ளார்கள்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம். தொடர்புக்கு ;- ஹாஜி செய்யது முஹம்மது அலி 0162436007 ஹாஜி முஹம்மது ஜமீல் 0193727867

வெளியீடு;-செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலி ( ரஹ் )

Tiada ulasan:

Catat Ulasan