அல்ஹம்து லில்லாஹ்.. புனித இஸ்ரா மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் பலத்த உற்சாகத்துடனும் மிகுந்த பக்தியுடனும் நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் நடைபெற்றது.
திட்டமிட்ட படி இரவு 8.45 க்கு இஷா தொழுகை ஜமாஅத்துடன் நடைபெற்று அதன் பின்னர் மக்களுக்கு தேநீர் விருந்து வழங்கி உபசரிக்கப் பட்டது.
சரியாக 9.10 க்கு சிறப்பு பயான் தொடங்கி பயானின் இறுதியில் திக்ரு மற்றும் ஸலவாத் ஓதி துஆ செய்யப்பட்டது.
தப்ரூக் வழங்கிய சகோதரி சித்தி சபாரியா அவர்களுக்கும் திரளாக வந்திருந்த சுற்று வட்டார மக்கள் அனைவருக்கும் நன்றி கூறிய பின்னர் இரவு 10.15 க்கு நிகழ்ச்சி நிறைவுற்றது.. அல்ஹம்து லில்லாஹ்.
Tiada ulasan:
Catat Ulasan