05 Jun 2016

RAMADHAN INVITATION -ரமளான் சிறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பேரன்புமிக்க பெருமக்களே..
நமது மதரஸா இமாம் கஸ்ஸாலியில் வழமை போல இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டும் புனித ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடனும் பயபக்தியுடனும் நடைபெற உள்ளது.
தற்போது நமது மதரஸா விரிவாக்கம் செய்யப் பட்டு, தொழுகையாளிகள் மனம் குளிரும் வண்ணம் மட்டுமல்ல.. மன ஓர்மையுடன் தொழும் வண்ணமும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே.
ரமளானில் ஒவ்வொரு நாளும் இரவு 9.00 மணிக்கு இஷாத் தொழுகையுடன் தராவீஹ் சிறப்புத் தொழுகை, அறிய வேண்டிய பல அரிய தகவல்கள், இறுதிப் பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் உருக்கமான துஆக்களுடன் ‘கியாமுல் லைல்’ சிறப்புத் தொழுகை உள்ளிட்ட நெகிழ்ச்சி ஊட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
சுற்று வட்டாரப் பெருமக்கள் தங்கள் குடும்பம் சூழ, அனைத்து நிகழ்வுகளிலும்  கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.
                                                                        நிர்வாகம், MIG
மேல் விபரங்களுக்கு :
ஹாஜி. ஜெகபர் அலி 0123327538
செய்யத் முஹம்மது அலி 0162436007
முஹம்மது ஜமீல் 0193727867


Tiada ulasan:

Catat Ulasan