இந்த வாரம் நம் மதரசாவின் தப்சீர் வகுப்பில் வாசகர்களிடம் கேட்டகப்பட்ட கேள்வி :
ஒரு மூமின் இறந்த பின்னும் அவனுக்கு வந்து சேரக்கூடிய பலன்கள் நன்மைகள் என்னென்ன?
பதில்: இது குறித்து ஒரு அறிவிப்பில் மூன்று விசயங்கள் வந்துள்ளது. இன்னொரு அறிவிப்பில் அதுவே ஏழாக விரிவாக வந்துள்ளது.
மூன்று என்ன ?
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும்முடிவடைந்து விடும். 1.நிலையான தர்மம் 2.பயனுள்ள கல்வி 3.இறைவனிடம் பிரார்த்திக்கும் குழந்தைகள். (முஸ்லிம்)
ஏழு என்ன?
கற்றுக் கொடுத்த கல்வி
பெற்றோருக்கு துஆ செய்யும் நல்ல குழந்தை
கட்டிக் கொடுத்த பள்ளிவாசல்
பயணிகளுக்கு கட்டிக் கொடுத்த சத்திரம் அல்லது நிழற்கொடை
பொதுமக்களுக்காக ஓடவிட்ட நதி (இன்னொரு அறிவிப்பில் கிணறு )
வழங்கிய தான தர்மங்கள் (இப்னு மாஜா பைஹகீ)
இன்னொரு அறிவிப்பில் நட்டு வைத்த மரம் (மிர்காத்)
ஆலிமா HRM ,
ரமிஷா
நூருல்
ஆரிபீன்
நூர் பசீலா
மர்சூக்கா
கருவிலிருந்து வெளிவராத (பிறக்காத ) உயிரினங்கள் யாவை?
சொர்க்கத்தில் முதன்முதலாக வழங்கப்படும் உணவு என்ன
அழிவு நாளின் பெரிய அடையாளங்களில் முதலாவது நிகழும் அடையாளம் என்ன ?
சில குழந்தைகள் தந்தையின் சாயலிலும் சில குழந்தைகள் தாயின் சாயலிலும் பிறப்பதற்கு யாது?
பதில் எழுதிக் கொண்டு வாருங்களேன்...

Tiada ulasan:
Catat Ulasan