கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் வரலாற்றுத் துளிகளில் சிலவற்றைக் கூறி கணக்கற்ற மக்களைக் கண்ணீர் விட்டு அழச் செய்த துருக்கி சிறுமி
Madrasah Imam Ghazzali merupakan sebuah institusi pendidikan Islam yang berperanan dalam melahirkan generasi berilmu, berakhlak, dan beramal soleh. Terletak di Selayang, madrasah ini menyediakan pendidikan berbentuk tahfiz dan pengajian Islam untuk membentuk individu yang berpegang teguh kepada ajaran Al-Quran dan Sunnah.
26 Februari 2014
22 Februari 2014
புதிரும் பதிலும் -4
01-02-2014 சனியன்று தப்சீர் வகுப்பில் கேட்டகப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய அறிவு ஜீவிகள் :
நலீஃபா ஷமீம்
நூருல் ஃபசீலா
ஃபிர்அவ்னின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளது?
எகிப்திலுள்ள கெய்ரோவில் ராயல் மியூசியத்தில்.
சொர்க்கவாசிகளுக்கு சொர்க்கத்தில் உள்ள விஷேச தன்மைகளில் ஒன்று: உண்ணுவார்கள்;குடிப்பார்கள்; ஆனால் மலம் ஜலம் கழிக்கமாட்டார்கள். அதாவது ஒன்லீ இன்கமிங்; நாட் அவுட் கோயிங்! இதுபோல ஒரு சிறப்புத் தன்மை உலகிலேயே யாருக்காவது உண்டா? உண்டெனில் யாருக்கு?
கருவறையில் உள்ள குழந்தை!
தொப்புள்கொடி வழியாக அதற்கு உணவு போகும்; ஆனால் மலம் கழிக்காது .
இந்த வாரக் கேள்வி என்ன தெரியுமா?:
- இந்த பூமியில் மாளிகை வாங்க எத்தனையோ லட்சம் வேண்டும். ஆனால் சுவனத்தில் மாளிகை வாங்க 12 ............ இருந்தால் போதும். நபியவர்கள் குறிப்பிட்ட அந்த 12 என்ன?
- இரண்டு கடல்கள்; ஒன்று மதுரமான இனிப்பு நீர். மற்றொன்று உப்புநீர். இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டுதான் இருக்கிறது; அனாலும் அவை ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை. இரண்டுக்குமிடையே மறைமுகமான தடுப்பு உண்டு என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَهُوَالَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هَذَاعَذْبٌ فُرَاتٌ وَّهَذَامِلْحٌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًامَّحْجُوْرًا
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)
அந்த இரண்டு கடல் சந்திக்கும் இடம்' எங்கு உள்ளது?
15 Februari 2014
வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப்
வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப் இன்ஷா அல்லாஹ் இன்று ரபீவுல் ஆகிர் பிறை 17- (15-02-2014) சனிக்கிழமை
, நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியில் நடைபெறும்.இச்சிறப்பு நிகழ்ச்சி மதரஸாவின் இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெறும்,
மஃரிபு தொழுகைக்குப்பின் மௌலிது ஷரீஃபும்,சிறப்பு துஆவும்,நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின், இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்களின் சிறப்புப் பேருரையும்,நடைபெறும்.இச்சிறப்பு நிகழ்ச்சிக்காக, மதரஸாவின் நிர்வாகிகள் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.அனைவரும் தவறாது கலந்துகொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.வஸ்ஸலாம்...
09 Februari 2014
02 Februari 2014
Langgan:
Ulasan (Atom)

